Seed Certification
விதை சுத்திகரிப்பு :: சுத்திகரிப்பு சாதனங்கள்

சுத்திகரிப்பு சாதனங்கள்

நிறம் பிரிப்பான்

ஒத்த நிறமற்ற தரம் குறைந்த விதைகளை பிரிக்கும் கருவியாகும். இது நிறம் மூலம் பிரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஏனெனில், அடர்த்தி மற்றும் பரிமாணங்கள் நல்ல விதைகள் மற்றும் நிறம் மாறிய விதைகளுக்கும் ஏற்றவையாக இருக்கும். ஆதலால் மற்றக் கருவிகள் பயனளிக்காது. இக்கருவியில் உள்ள ஒளி அணுக்கள் நல்ல விதைகள் பிரதிபலிக்கும் ஒளியை பிண்ணனியாகக் கொண்டு இயங்குகிறது. ஒளி அணுக்கள் வேறுபட்ட நிறங்களை பிரதிபலிக்கும் விதைகளை கண்டறிந்து விடும். அப்படிக் கண்டறிந்து விடும்.  அப்படி பிரதிபலிக்கும் விதைகளைக் கண்டறிந்து விடும். அப்படிக் கண்டறிந்த நிறம் மாறிய விதைகள் மின்தூண்டுதலில் அலையால் நிராகரிக்கப்படும்.

நிறத்தைக் கொண்டு பிரித்தல்

நிறம் பிரிப்பான் ஒரு மின்னோட்ட கண் மூலம் இயங்குகிறது. அக்கருவியில் இயக்கக்கூடிய நிறத்தை அந்த மின்னோட்டக் கண் அறிந்த கொள்ளும். விதைகளை அக்கருவியால்  செலுத்தும் போது மின்னோட்ட கண் வழியே செல்லும். விதைகளின் நிறங்களை இது பதிவு செய்யும். மாறுபட்ட நிறமாகக் கண்டறிந்தால் வேகமான காற்றானது அவ்விதையை நிராகரித்து விடும்.

12_colorsorter

 

Updated On:Jan, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam